டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் ‘அன்னைக்கு’ என்கிற கடித உரைநடையின் முதல் பகுதி.
 |
டாக்டர் மு.வரதராசனார் |
அன்புள்ள அம்மா,
விடுமுறையில் இரண்டு வாரம் வீட்டில் இருந்துவிட்டு வரலாம் என்று மகிழ்ச்சியோடு புறப்பட்டு வந்தேன். ஆனால் நீயும் அப்பாவும் எனக்கு இல்லாத கவலையை எல்லாம் ஏற்படுத்தி ஆயிரம் உபதேசம் செய்து திரும்பச் செய்திருக்கின்றீர்கள். இப்படி உண்மையை ஒளிக்காமல் எழுதியதற்காக என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் மேல் உள்ள அன்பாலும் நம்பிக்கையாலும் இவ்வாறு எழுதுகிறேன்;