தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

18.9.12

நன்னூலின் திறன் கண்டீரோ!


காண்டிகை மற்றும் விருத்தியுரையின் இலக்கணம்


உரை என்பது காண்டிகையுரை எனவும் விருத்தியுரை எனவும் பகுத்துக்கூறப்படும்.  முதலாவதாகிய காண்டிகையுரையின் இலக்கணம் பின்வருமாறு அமைகிறது.
கருத்துரையும்,  பதவுரையும்,  மேற்கோளும் ஆகிய மூன்றையும் சொல்லுதலாலும் இம்மூன்றுடனே வினாவும் விடையும் அகிய இரண்டு வகைகளாயும் கூட்டிச் சொல்லுதலாலும் சூத்திரத்துள்ள பொருளை விளக்கி உரைப்பவை காண்டிகையுரைகளாம்.
நன்னூல்:
``கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
சூத்திரத்து உட்பொருள் தோற்றுவ காண்டிகை”(நன்னூல் 22)
சூத்திரத்தில் உள்ள பொருள் மாத்திரமே அல்லாமல், அவ்விடத்துக்கு இல்லாமல் முடியாத எல்லாப் பொருள்களும் விளங்குமாறு, தான் உரைக்கின்ற உரையாலும் ஆசிரிய வசனங்களாலும் மேற்கூறிய ஐந்து காண்டிகை உறுப்புகளினாலும் ஐயம் விலக மெய்யான பொருளைக் குறைவின்றி உரைப்பது விருத்தியுரையாகும்.
நன்னூல்:
சூத்திரத்து உள்பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றியமையா யாவையும் விளங்கத்
தன் உரை யானும் பிறனூ லானும்
ஐயம் அகலஐங் காண்டிகை உறுப்போடு
மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி (நன்னூல் 23)

யோகத்திற்கு வலிமை சேருங்கள்!


யோகத்திற்குத் தடை எது?
நம்முடைய உடலின் தன்மைக்கு ஏற்காத உணவை மேற்கொள்ளக் கூடாது.  நான்கு பிரிவுகளாக்கி யோகம் பயிலுபவன் தன் வயிற்றை இரண்டு பங்கு உணவாலும் ஒரு பங்கு நீராலும் நிரப்ப வேண்டும்.  உயிர் காற்று வரும் அளாவிற்கு ஒரு பகுதியைத் தனித்துஇருக்கச் செய்ய வேண்டும்.

15.9.12

தமிழ்க் குறிகள்




பல்லாற்றானும் பலதிறங்களைக் கொண்டு இலங்குகின்ற நம் தமிழ் மக்கள் குறியீடுகளைத் தமிழில் கையாள்வது சற்று குறைவே எனலாம்.  இதற்கு உதவும் முகத்தான் குறியீடுகளின் தமிழ்ப் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
காற்புள்ளி             (,) (comma)
அரைப்புள்ளி          (;) (semicolon)
முக்காற்புள்ளி         (:) (colon)

14.9.12

மு.வ வின் அன்னைக்கு - புரட்சிக் கொள்கைகளைப் பின்பற்றலாமா?


அன்னைக்கு 2


அன்புள்ள அம்மா,
     எப்படியாவது வறுமை ஒழிய வேண்டும் என்று நான்ன் எழுதினேனே அல்லாமல் கிளர்ச்சி மூலமாகவா புரட்சி வாயிலாகவா என்று நான் ஒரு கருத்தையும் எழுதவில்லையே?  ஆனாலும் நீ எழுதிய அறிவுரையை ஏற்றுக்கொண்டு நன்றி கூறுகின்றேன்.  “மற்ற நாட்டின் எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு இந்த நாட்டிற்கும் அதே வழியை

13.9.12

திருநாவுக்கரசரின் நோன்பு


திருநாவுக்கரசரின் வடதளி உண்ணா நோன்பு:

திருநாவுக்கரசர் அவர்கள் பழையாறை என்னும் இடத்தை அடைந்தார்.  இவ்விடத்தில் இருந்தது வடதளி என்னும் கோயில்.  இக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தை சமணர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  இதனை அறிந்த நாவுக்கரசர் அவ்விறைவனைக் கண்டாலொழிய உணவு உண்ணமாட்டேன் என்று அக்கோயிலின் முன்னே உண்ணா நோன்பை மேற்கொண்டார்.  அன்றிரவு அந்நாட்டை ஆண்ட மன்னனின் கனவில் சிவபெருமான் எழுந்து சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் காட்டினார்.  மேலும் அச்சிவலிங்கத்தை வடதளியில் வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
  அரசன் தன்னுடைய பரிவாரங்களுடன் சென்று சிவலிங்கம் இருக்கும் இடத்தை அடைந்து அதனை மீட்டு வந்து வடதளிக்கோயிலில் நிறுவினான்.  இதனை அறிந்து நாவுக்கரசர் அகமகிழ்ந்து அக்கோயில் சென்று சிவனை வழிபட்டார்.