குயிலி இராஜேஸ்வரி
|
பெண் நாவலாசிரியர்களுள் ஒருவராக வைத்து போற்றப்படுபவர் எழுத்தாளர் குயிலி இராஜேஸ்வரி ஆவார். இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். நாவலாசிரியர் கலை விமர்சகர். குழந்தைகளுக்காக கதைகளும், நாடகங்களும் பாடல்களும், நாட்டிய நாடகங்களும் எழுதியுள்ளார். இவர் குழந்தைகளுக்காக எழுதிய ‘பாரதி ஆத்திசூடி’ என்ற புத்தகம் மிகவும் சிறப்பாக வரவேற்கப்பட்டது.
நேஷனல் புக் டிரஸ்டுக்காக குழந்தைகளுக்கான இரண்டு புத்தகங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார். இவர் அமைத்து நடத்தி வந்த மாதங்கி மகேஸ்வரி பீம்ஸ் என்ற குழந்தைகள் சங்கத்தினர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மேடைகளிலும் கலை நிகழ்ச்சிகளைத் திறம்பட அளித்து வந்தனர்.
குயிலி இராஜேஸ்வரி அவர்களின் புகைப்படம் இருப்பின்
sadishirisappan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.
குயிலி ராஜேஸ்வரி அவர்கள் பெரியவர்களுக்காக சுமார் இருபத்தைந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரின் எழுத்துக்களை ஆங்கிலத்திலும் பார்க்கலாம். தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் ‘அன்பு சுடும்’ என்ற இவரது நாவல் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.
நாங்கள் காணும் இந்தியா - தமிழகம், நாங்கள் காணும் இந்தியா - கேரளம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் சுற்றுலா செல்வோருக்கு ஏற்ற கையேடாகும். மாணவர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் கருதப்படுகிறது. புதுச்சேரி பள்ளிகளிலுள்ள நூலகங்களில் இந்நூல்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment