சமச்சீர் கல்வி
|
சமச்சீர் கல்வி குறித்து புதுச்சேரி புலவர் திரு.பெருந்தேவன் (இராமலிங்கம்) அவர்கள் நுட்பமான கருத்துக்களைத் தன்னுடைய ‘அரசியல் அறம்’ என்னும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அவர்தம் ஆழ்ந்த சிந்தனையை இங்குப் படித்து இன்புறுவோம்.
அறிவுக்கே கல்வி அறியார் பொருள்செய்
பெருவிருப்பம் கொள்ளல் பிழை.
கல்வி என்பது அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு கற்கப்படுவதாகும். இதை அறியாதவர்களே பணம் சம்பாதிக்கும் பேராசை கொண்டு கற்று வருகின்றனர். இது பிழையானதாகும்.
அனைவர்க்கும் கல்வி அளிக்க; வளமை
தனக்கேற்ப நல்கல் தவிர்.
எவ்வகை வேறுபாடும் கருதாமல் அனைவர்க்கும் தரமான கல்விதருதல் வேண்டும். ஒரு சிலரின் வசதிக்கேற்ப உயர்கல்வி தருவதனை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.
உரமும் சமநிலையும் உள்ளன்பும் ஊட்டும்
தர்முடைய கல்வியினைத் தா.
குன்றாத வலிமை, சமமான நிலை, ஆழமான அன்பு ஆகியவற்றை நிலைபெறச் செய்யும் தகுதி வாய்ந்த கல்வியை அரசு அனைவர்க்கும் அளித்தல் வேண்டும்.
எந்தமுறை கற்பித்தற்கு ஏற்றமுறை அந்தமுறை
எல்லார்க்கும் ஈதல் இனிது
‘மெட்ரிக்’ முதலான நால்வகைக் கல்வி முறைகளில் இசைவான முறையைக் கண்டறிந்து அந்த முறையிலேயே அனைவர்க்கும் கற்பிக்க வேண்டும்.
புலவர் பெருந்தேவன் |

No comments:
Post a Comment