எல்லாரும் எல்லீரும் புணரும் நிலை
|
அத்து என்னும் சாரியைக் குறித்து நன்னூலார் என்ன சொல்கிறார்?
`அத்து’ என்னும் சாரியையின் முதலில் ‘அ’ என்னும் உயிர் வரின் இயல்பினும் விதியினும் கெட்டுப் புணரும் என்கிறார்.
(உ.ம்)
மக+அத்து=மகத்து ‘அ’ கெட்டது
மர+அத்து =மரத்து ‘அ’ கெட்டது
”அத்தின் அகரம் அகரமுனை இல்லை” (252-நன்னூல்)
உருபுகள் புணரும் போதுஆய்தம் கெட்டுப் புணரும் நிலை:
அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப் பெயர்கள் மொழி முதல் சுட்டெழுத்தின் முன் நிற்கும் ஆய்த எழுத்தானது, உருபுகள் புணரும்போது ‘அன்’ சாரியை வரின் கெடும். வராமலும் இருக்கும்.
(உ.ம்)
அஃது+ஐ=அதனை, அஃதை
இஃது+ஐ=இதனை, இஃதை
உஃது+ஐ=உதனை, உஃதை
“சுட்டின் முன் ஆய்தம் அன்வரின் கெடுமே” (251-நன்னூல்)
எல்லாரும், எல்லீரும் என்பவற்றுடன் உருபு புணரும் விதம்:
எல்லாரும், எல்லீரும் என்னும் சொற்களோடு ஆறு உருபுகளும் புணரும் போது ‘உம்’ நீங்கி ‘எல்லார்’ என்றாகும். பின்னர் எல்லாருடன் தம் சாரியைச் சேர்ந்து `எல்லார்தம்’ என்றாகும். எல்லார்தம் என்பதுடன் வேற்றுமை உருபு சேர்ந்து பின் `உம்’ என்பதும் சேரும்.
எல்லார்+தம்+ஐ_உம்=எல்லார் தம்மையும்
`எல்லீர் ’ என்ற சொல் புணர ‘நும்’ என்பதைச் சேர்க்க வேண்டும்.
எல்லீர்+நும்+ஐ+உம்=எல்லீர் நும்மையும்
“எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை
தள்ளி, நிரலே தம், நும் சாரப்
புல்லும் உருபின் பின்னர் உம்மே” (246-நன்னூல்)

No comments:
Post a Comment