அகல்விளக்கு இணைய இதழ்
|
அகல்விளக்கின் முகப்புத் தோற்றம் |
பல்சுவை இணைய இதழாக இணையத்தில் வலம் வந்துகொண்டிருப்பது ‘அகல்விளக்கு.காம்’ ஆகும். இவ்விதழ 2011 அக்டோபர் 4 ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டு அதே ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. மாதம் இரு முறை என்னும் கால வரையறையுடன் வெளிவரும் அகல்விளக்கு 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கால வரையறையின்றி புதிய பரிணாமத்தில் வர உள்ளது. திரு. கோ.சந்திரசேகரன் என்பவர் இவ்விதழைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்.
அகல்விளக்கு இணைய இதழில் இடம்பெறும் படைப்புகள் பல வாசகர்களால் படைக்கப்படுபவை. எவரும் படைப்புகளை எழுதி அனுப்பலாம். இதுவரை எவ்விதழிலும் வெளிவராத படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
கால வரையறையை நீக்கியிருப்பதன் மூலம் படைப்பாளிகள் அனுப்பும் படைப்புகள அனைத்தும் உடனுக்குடன் வெளியிடப்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் பதிப்பகத்தின் முக்கிய அறிவிப்புகள் இதழில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இப்பதிப்பகத்தாரால் நடத்தப்படுகின்ற இன்ன பிற தளங்களின் பெயர்களோடு கூடிய இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.
`வரலாறு’ என்னும் பகுதியில் ‘டுரோஜன் சண்டை மற்றும் டுரோஜன் குதிரை’ என்னும் தொடர் கட்டுரை இடம்பெறுகிறது. ‘இடங்கள்’ என்னும் பகுதியில் கவின் மிகு இடங்களைப் பற்றிய கட்டுரை இடம்பெற்று நம்மை ஈர்க்கிறது. ‘சில்பரி மலை, ஆவ்பரி கல் வட்டங்கள் மற்றும் ஸ்டோன் ஹெஞ்ச்’ போன்றவை பற்றி கட்டுரைக்கப்பட்டுள்ளன.
`செய்திகள்’ என்னும் பகுதியில் நாட்டு நடப்பு செய்திகள இடம்பெறுகின்றன.
படைப்புகளை வாசகர்கள் தங்கள் கைவசம் வைத்திருப்பின்,
கோ.சந்திரசேகரன்,
அகல் விளக்கு இணைய இதழ்,
எண் 2, சத்தியவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை 600 050
மின்ன்ஞ்சல் :admin@agalvilakku.com
என்ற முகவரிக்கு அனுப்பி படைப்புகளை இடம்பெறச் செய்யலாம்.
No comments:
Post a Comment