கணித் தமிழ்ச் சங்கம்
|
கணித்தமிழ்ச் சங்க வலைத்தளம் |
1991 பிப்ரவரி சென்னையில் நடைபெற்ற 2வது உலகத்தமிழ் இணைய மாநாடு முடிந்த பின் மார்ச்சு 1 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் மூலம்கணித்தமிழ்ச் சங்கம் உருவானது. தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் கணித்தமிழ்ச் சங்கம்.
‘தமிழ் நெட் 99’ மாநாட்டில் எடுக்கப்பட்ட இரண்டு முக்கிய நிகழ்வுகளான ‘தமிழ் விசைப்பலகை’, ‘தமிழ் குறியீடு’ ஆகியவற்றை தரப்படுத்துதல் தொடர்பில் தமிழக அரசின் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியது கணித்தமிழ்ச் சங்கம்.
இந்தத் தரப்படுத்துதல் படிதான் அன்றைய காலத்தில் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிக்கப்பட்ட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி பல முன்னணி நிறுவனங்கள் தமிழ் மென்பொருள்களை தயாரிக்க முன் வந்தன. அம்மென்பொருள்களை தமிழக அரசின் சார்பில் ‘தரப்படுத்தல் சரிபார்ப்புச் சான்றிதழ்’ வழங்கும் பணியைக் கணித்தமிழ்ச் சங்கமே செய்தது. அதற்கான அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
ஒவ்வொரு மாதமும் அன்றைய தகவல் தொழில் நுட்ப செய்திகளை, தமிழ் மென்பொருள் தயாரிப்பு சிக்கல்கள் போன்ற பலவற்றை அதன் தொடர்பான அறிஞர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தியது.
2000 ஆம் வருடத்தில் சிங்கப்பூரில் மிகச் சிறப்பாக நடைபெற்ற 3வது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
தற்போது இக்கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராக திரு.சொ.ஆனந்தன் அவர்களும், துணைத்தலைவராக திரு.இராம.சுகந்தன் அவர்களும் செயலாளராக ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி அவர்களும் பொருளாளராக ந.ஆனந்தன் அவர்கள் இருந்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில் புதியதாக கணித்தமிழ்ச் சங்க மதுரைக் கிளை 25 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. மதுரைக்கிளை சார்பில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் பல்வேறு கணினித்தமிழ் பயிலரங்கங்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
11வது தமிழ் இணைய மாநாட்டிலும் கண்காட்சியிலும் மக்கள் கூடத்திலும் கணித்தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பு முழுமையானது. முதன்மையானது.
No comments:
Post a Comment