திருவிகவின் பெருவாழ்வு
|
![]() |
| ம.பொ.சி |
அரசியலில் சேர்ந்து நான் திரு.வி.க வுடன் பணியாற்றாவிட்டாலும் அவர் எழுதிய “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்னும் நூல்தான் என்னை காந்தியவாதி ஆக்கியது என்கிறார் திரு.ம.பொ.சி. அவர்கள். ஏனென்றால் காந்திய நெறிக்கு விளக்கம் தரும் நூல் இதைவிட வேறு ஒன்றும் இருக்க முடியாது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது என்கிறார்.
எல்லாவற்றையும் விட அவரது ஒழுக்கம் ம.பொ.சியின் உள்ளத்தை அவர் பக்கம் திரும்பச் செய்ததாகக் கூறுகிறார். திரு.வி.க வைச் சந்தித்து உரையாடும் போதெல்லாம் பழங்கால முனிவருடன் பேசும் அனுபவத்தைத் தந்ததாகவும் தமிழும் தேசியமும் பிணைந்திருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு அவர்தான் முன்னோடி என்றும் அதிசயிக்கிறார்.
எங்கும் எதிலும் தமிழர் வாழ்வில் தமிழ்தான் முதலிடம் பெற வேண்டும் என்று அவர் (திரு.வி.க) விரும்பினார். அவர் காங்கிரசில் இருந்த காலத்தில் அந்த மகாசபையின் தமிழ்நாட்டுக் கிளையை தமிழ் வழிப்படுத்த அவர் பெரிதும் முயன்றதாக ம.பொ.சி நவில்கிறார். இந்தி திணிப்பை எதிர்ப்பதிலே எங்கள் இருவருக்கும் கருத்தொற்றுமை நிலவியது. ஆங்கில ஆதிக்கம் நிலைபெறாத வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேராத முறையிலும் இந்தி திணிப்பு எதிர்க்கப்பட வேண்டும் என்பதிலே அவர்தான் எனக்கு வழிகாட்டி. அவர் அன்பின் வடிவமாகத் திகழ்ந்தார் என்கிறார்.

No comments:
Post a Comment