தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

13.10.12

நீலாம்பிகை அம்மையார்



நீலாம்பிகை அம்மையார் அவர்கள் 1903 ஆம் ஆண்டு பிறந்தவர்.  மறைமலையடிகளின் மகளாகப் பிறந்தார்.  மறைமலையடிகளைப் போன்றே தமிழ்ப்பணி ஆற்றியவர்.  தமிழ் மொழியின் நிலை திரியாது அதன் இயல்பினின்று மாறாமல் இருக்க தனித்தமிழை வலியுறுத்தினார்.  முப்பெண்மணிகளின் வரலாறு, `பட்டினத்தார் பாராட்டிய மூவர்’, `வடசொல் தமிழ் அகரவரிசை, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்என்கிற நூல்களை எழுதி வெளியிட்டார்.

நீலாம்பிகை அம்மையாருக்கு ஆசானாக இருந்து தமிழ் போதித்தவர் தந்தை மறைமலையடிகளே.  அம்மையாரும் தன்னுடைய நூல்களில் தன் தந்தையின் நூற்களிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துக் கூறியுள்ளார்.  தன்னுடைய நூல்களில் பெண்களின் நிலையை திறம்பட எழுதியுள்ளார்.

3 comments:

  1. தங்கள் வலைப்பூவில் உள்ள நாவி பிழை திருத்தி எனக்கு நல்ல உபயோகமாக இருந்தது ,,,நன்றி

    அனைத்து பதிவுகளுமே தகவல் களஞ்சியம்

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கு நன்றி. உம் போன்றோரின் ஊக்கக் கருத்துக்கள் எமக்கு வலுசேர்க்கின்றன.- கா இரி சதிஷ்

    ReplyDelete