தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

30.9.12

அவதாரத் திருப்பதிகள்

எம்பெருமானும் ஆழ்வார்களும் அவதாரம் செய்த திருப்பதிகள்:
திருக்கடல் மல்லை:
தலசயனப் பெருமாள் , பூதத்தாழ்வார்
திருக்குருகூர்:
ஆதிநாதப் பெருமாள்
நம்மாழ்வார்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ரங்கமன்னர்
பெரியாழ்வார்
ஆண்டாள்
திருக்கோளூர்:
வைத்தமாநிதிப்பெருமாள்
மதுரகவியாழ்வார்
திருவெஃகா :
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
பொய்கையாழ்வார்
உறையூர்:
அழகிய மணவாளப் பெருமாள்
திருப்பாணாழ்வார்

29.9.12

திருவிகவும் உரைநடை நூல்களும்


திரு.வி.க அவர்களின் உரை நடை நூற்பட்டியல். . . . . . . . . . . . . .  . .
கதிரைவேற் பிள்ளை அவர்கள் சரித்திரம்
தேசபக்தாமிர்தம்
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
என் கடன் பணி செய்து கிடப்பதே
சைவ சமய சாரம்
நாயன்மார் திறம்
தமிழ்நாடும்

மானக்கஞ்சாறர்


சோழ நாட்டில் கஞ்சாறூர் என்னும் ஊர் இருந்தது.  இவ்வூரில் வேளாளர் குடியில் தோன்றியவர் தான் மானக்கஞ்சாறனார்.  சிவனின் மீது மிகுந்த பக்திகொண்டவர்.  சிவபக்தர்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்யும் தன்மையவர்.

ஆனால் இவருக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டவில்லை.  இறைவனை வேண்டி நின்றார் பின்னர் இறைவன் திருவருளால் ஒரு பெண் மகவை அடையப்பெற்றார்.  அம்மகவை நன்றாக வளர்த்து வந்தார்.  ஏற்ற பருவம் வந்ததும் அப்பெண்ணை மணம் முடித்துக்கொடுக்க

27.9.12

தமிழ் செம்மொழிப் பாடல்

thamizh classical song

திரு.வி.கவும் ஆங்கிலமும்

திரு.வி.க.வின் ஆங்கில அறிவு:
     திரு.வி.க அவர்கள், தான் ஆங்கில அறிவில் மெத்த புலமை பெறவில்லை என்பதை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.  ஆனாலும் அவருக்கு ஆங்கில அறிவு இல்லை என்று நாம் சொல்லிவிட முடியாது.  பல நேரங்களில் தான் பணியாற்றிய பள்ளியில் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் நன்கு புலமை பெற்ற எவராவது அவர் கடிதம் எழுதும் போது  வந்தால் அவரிடமே அதனை ஒப்படைத்து கடிதம் எழுதும் படி கூறிவிடுவார்.

`சேக்சுபியர் மன்றம்’ என்னும் ஆங்கில மன்றத்தில் ஏராளமான ஆங்கிலக் கவிஞர்களின்

26.9.12

வினையெச்சமும் நன்னூலும்


வினையெச்சம் ஓர் அலசல்
வினை முடியாது நிற்கும் தன்மையுடைய சொல்லை வினையெச்சம் என்பர். நன்னூலார் இதனை பின்வருமாறு வரையறுத்துச் சொல்கிறார்.
“தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே” (நன்னூல் 342)
அதாவது செயலும் காலமும் விளங்கி, பாலுடன் வினையானது எஞ்ச நிற்பது வினையெச்சமாகும்.
வினை என அவர் உரைத்ததற்குக் காரணம் வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்,

25.9.12

எங்கெங்கு காணினும் சக்தியடா!



பாவேந்தர் அவர்களின் முதல் பாட்டு `சக்திப் பாட்டு என்று அழைக்கப்படுகிறது.  பாரதியிடம் ஏகோபித்த அன்பைப் பெற்ற பாரதிதாசன் அடிக்கடி பாரதியின் இல்லத்திற்குச் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றார்.  ஒரு நாள் பாரதியார், குயில் சிவா, வ.வே.சு ஐயர், போன்றோர் குழுமியிருந்தனர்.  அப்போது பாரதிதாசன் பற்றி அவர்கள் பேசலாயினர்.  பாரதியார் கனகசுப்புரத்தினம்
கவிதை எழுதுவதில் வல்லவர் என்று கூற உடனே கூடியிருந்தவர்கள் ஒரு கவிதை புனையுமாறு கேட்டனர். 

நாலா முத்தம்


பாவேந்தர் அவர்கள் ‘நாலா முத்தம்என்னும் காதல் காவியத்தை 1938ஆம் ஆண்டு படைத்தார்.  இது தான் பின்னாளில் ‘எதிர்பாராத முத்தம்என்றானது.கஜராஜ் சரோஜா காதல் மகத்துவம்என்னும் உண்மை நிகழ்வுக் கவிதை பாரதியின் கவிதாமண்டலத்தில் வெளிவந்தது.  இதனை அடியொட்டியது தான் எதிர்பாராத முத்தத்தின் கரு என்கின்றனர்.  1939ஆம் ஆண்டு தமிழக இதழில் வெளிவந்த ‘ஒரே முத்தம் – இரண்டு மரணங்கள்என்ற சிறுகதையும் இதன் மூலங்கள் என கூறப்படுகிறது.

பொன்முடி, பூக்கோதை என்கிற இருவர்தாம் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகி ஆவர்.  நாயகன் இறந்தவுடன் நாயகியும் மாண்டு போகும் காதலின் இறுதி அத்தியாயம் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.  இதனை பாரதிதாசன் பின்வருமாறு நவின்றார்.
“தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன்!
செத்ததற்குச் செத்தாள் அத்தென்னாட்டு அன்னம்!” 

23.9.12

அறிவோம் நாயன்மாரை


இடங்கழி நாயனார்:

கோ என்றொரு நாட்டில் உள்ள இடம் தான் கொடும்பாளூர்.  இவ்வூர் அந்நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது.  இந்நாட்டை ஆண்ட குறுநில மன்னன் இடங்கழியார்.  இவர் மக்கள் மீதும் சிவபெருமான் மீதும் ஏக அன்பு கொண்டு விளங்கினார்.  சிவபெருமானுக்கு நாடுமுழுவதும் பூசைகள் நடைபெற

20.9.12

பாரதியின் கவிதைக் காதலி


கவிதைக் காதலி

மகாகவி பாரதியார் கவிதையைக் காதலியாகச் சொல்ல என்ன காரணம்?
கவிதையின் மூலம், தான் திளைத்த இன்பத்தை வெளிப்படுத்துகிறார்.  நாமும் அவ்வின்பத்தில் மூழ்குவோம்.  வாராய் என்று கவிதையை கவின்மிகு வார்த்தையில் ஆராதிக்கும் பாரதியை என்னவென்று பாராட்டுவது.  ``நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே” என்னும் வரிகள் நெஞ்சை அள்ளிச் செல்வது உண்மையே!

வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன
நின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து

எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குர லுடைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்
மலரினத் துன்றன் வாள் விழி யொப்ப

நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்? குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள்போல் தண்ணிய
நீருடைத் தறிகிலேன்; நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நினையே பேணி நெடுநாள் போக்கினேன்.

வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்
வீழ்த்திடைத் தொண்டையில் வேதனை செய்தென
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்

கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து காண்பொழுது ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்
மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப்

புந்தொழில் ஒன்று போற்றதும் என்பான்
தெந்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து அவன்
பணிசெய இசைந்தேன், பதகி நீ! என்னைப்
பிரிந்துமற் றகன்றனை பேசொணா நின்னருள்

இன்பமத் தனையும் இழந்துதான் உழன்றேன்
சின்னாள் கழிந்தபின் – யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த்

தன்மகனிடை என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடல்
துணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்
பாவமிங் கில்லையெனப் பணிப்பிஃதாகலின்!




18.9.12

நன்னூலின் திறன் கண்டீரோ!


காண்டிகை மற்றும் விருத்தியுரையின் இலக்கணம்


உரை என்பது காண்டிகையுரை எனவும் விருத்தியுரை எனவும் பகுத்துக்கூறப்படும்.  முதலாவதாகிய காண்டிகையுரையின் இலக்கணம் பின்வருமாறு அமைகிறது.
கருத்துரையும்,  பதவுரையும்,  மேற்கோளும் ஆகிய மூன்றையும் சொல்லுதலாலும் இம்மூன்றுடனே வினாவும் விடையும் அகிய இரண்டு வகைகளாயும் கூட்டிச் சொல்லுதலாலும் சூத்திரத்துள்ள பொருளை விளக்கி உரைப்பவை காண்டிகையுரைகளாம்.
நன்னூல்:
``கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
சூத்திரத்து உட்பொருள் தோற்றுவ காண்டிகை”(நன்னூல் 22)
சூத்திரத்தில் உள்ள பொருள் மாத்திரமே அல்லாமல், அவ்விடத்துக்கு இல்லாமல் முடியாத எல்லாப் பொருள்களும் விளங்குமாறு, தான் உரைக்கின்ற உரையாலும் ஆசிரிய வசனங்களாலும் மேற்கூறிய ஐந்து காண்டிகை உறுப்புகளினாலும் ஐயம் விலக மெய்யான பொருளைக் குறைவின்றி உரைப்பது விருத்தியுரையாகும்.
நன்னூல்:
சூத்திரத்து உள்பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றியமையா யாவையும் விளங்கத்
தன் உரை யானும் பிறனூ லானும்
ஐயம் அகலஐங் காண்டிகை உறுப்போடு
மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி (நன்னூல் 23)

யோகத்திற்கு வலிமை சேருங்கள்!


யோகத்திற்குத் தடை எது?
நம்முடைய உடலின் தன்மைக்கு ஏற்காத உணவை மேற்கொள்ளக் கூடாது.  நான்கு பிரிவுகளாக்கி யோகம் பயிலுபவன் தன் வயிற்றை இரண்டு பங்கு உணவாலும் ஒரு பங்கு நீராலும் நிரப்ப வேண்டும்.  உயிர் காற்று வரும் அளாவிற்கு ஒரு பகுதியைத் தனித்துஇருக்கச் செய்ய வேண்டும்.

15.9.12

தமிழ்க் குறிகள்




பல்லாற்றானும் பலதிறங்களைக் கொண்டு இலங்குகின்ற நம் தமிழ் மக்கள் குறியீடுகளைத் தமிழில் கையாள்வது சற்று குறைவே எனலாம்.  இதற்கு உதவும் முகத்தான் குறியீடுகளின் தமிழ்ப் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
காற்புள்ளி             (,) (comma)
அரைப்புள்ளி          (;) (semicolon)
முக்காற்புள்ளி         (:) (colon)

14.9.12

மு.வ வின் அன்னைக்கு - புரட்சிக் கொள்கைகளைப் பின்பற்றலாமா?


அன்னைக்கு 2


அன்புள்ள அம்மா,
     எப்படியாவது வறுமை ஒழிய வேண்டும் என்று நான்ன் எழுதினேனே அல்லாமல் கிளர்ச்சி மூலமாகவா புரட்சி வாயிலாகவா என்று நான் ஒரு கருத்தையும் எழுதவில்லையே?  ஆனாலும் நீ எழுதிய அறிவுரையை ஏற்றுக்கொண்டு நன்றி கூறுகின்றேன்.  “மற்ற நாட்டின் எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு இந்த நாட்டிற்கும் அதே வழியை

13.9.12

திருநாவுக்கரசரின் நோன்பு


திருநாவுக்கரசரின் வடதளி உண்ணா நோன்பு:

திருநாவுக்கரசர் அவர்கள் பழையாறை என்னும் இடத்தை அடைந்தார்.  இவ்விடத்தில் இருந்தது வடதளி என்னும் கோயில்.  இக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தை சமணர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  இதனை அறிந்த நாவுக்கரசர் அவ்விறைவனைக் கண்டாலொழிய உணவு உண்ணமாட்டேன் என்று அக்கோயிலின் முன்னே உண்ணா நோன்பை மேற்கொண்டார்.  அன்றிரவு அந்நாட்டை ஆண்ட மன்னனின் கனவில் சிவபெருமான் எழுந்து சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் காட்டினார்.  மேலும் அச்சிவலிங்கத்தை வடதளியில் வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
  அரசன் தன்னுடைய பரிவாரங்களுடன் சென்று சிவலிங்கம் இருக்கும் இடத்தை அடைந்து அதனை மீட்டு வந்து வடதளிக்கோயிலில் நிறுவினான்.  இதனை அறிந்து நாவுக்கரசர் அகமகிழ்ந்து அக்கோயில் சென்று சிவனை வழிபட்டார்.

12.9.12

தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம்


மதுரை தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம்


   காலப்போக்கில் தமிழ் நூல்கள் தடம் தெரியாமல் மாய்ந்துவிடப்போகிறது என்னும் அச்ச மேலீட்டிற்கு முடிவுகட்டும் முகத்தான் அமையப்பெற்ற தளம் தான் மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.  உலகளாவிய தமிழர்களை ஒன்றினைக்கும் களமாகத் திகழ்ந்து வருகிறது.  எந்த ஒரு இனத்தின் கலாச்சாரத்தினையும் அறிந்துகொள்வதற்கு வித்தாக அமைவது இலக்கியங்கள்.  அவ்விலக்கியங்களைத்

11.9.12

ஆனாய நாயனார்:


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு அருகே இருக்கும் திருமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார்.  இவர் இடையர் குலத்தில் உதித்தவர்.  சிவபெருமானையே எப்பொழுதும் நினைந்து உருகுவார்.  அவருக்குப் பல தொண்டுகள் செய்த வண்ணம் இருந்தார்.  நிரைகளை மேய்ப்பதைத் தன்னுடையத் தொழிலாகக் கொண்டிருந்தார்.  இவர் இசையின் மீது ஆர்வங்கொண்டிருந்தார்.  புல்லாங்குழல் இசைப்பதை மிகவும் விரும்பினார்.  எப்பொழுதும் சிவனை நினைத்தே இசைத்துக்கொண்டிருப்பார்.
  ஒருமுறை இவ்வாறு இசைத்துக்கொண்டிருக்கும் போது இவருடைய இசையைக் கேட்ட தேவர்கள் தத்தம் தொழில் மறந்து மயக்கமுற்றனர் இவரது இசையைக் கேட்டு.  பசுக்களும் தம் தொழிலை மறந்து நின்றன.  இது மட்டுமா எருது, சிங்கம், மான், யானை போன்ற எண்ணற்ற உயிரினங்கள் மெய்மறந்து நின்றன.  எல்லாமும் இவர் பின்னே செல்லத் துவங்கின.  இச்செய்தியை அறிந்து சிவனும் தன் துணையுடன் வந்து இவரைக் கண்டு இசையில் மெய்மறந்து போனார்.  பின்னர் சிவன் கேட்டுக்கொண்டதற்கு இயைய ஆனாயர் கைலாயம் சென்றார்.  அங்கு தேவர்களுக்கும் எம்பெருமானுக்கும் புல்லாங்குழல் வாசித்து எம்பெருமானின் அடியார்களை மகிழ்வித்தார்.

10.9.12

மறைமலையடிகளைப் பின்பற்றிய திரு.வி.க

திரு.வி.கவும் மறைமலையடிகளும்:

திரு.வி.க மறைமலையடிகளிடத்தும் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடத்தும் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.  முதலில் மறைமலையடிகளை நெருங்கத் தயக்கங்காட்டினார்.  அதற்கு, தங்குரு கதிரைவேலருக்கும் அடிகளாருக்கும் நிகழ்ந்த சொற்போரே காரணமாகும். 
1910 ஆம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் மறைமலையடிகளார் ஓர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.  அதனை திரு.வி.க கேட்க நேர்ந்தது; அன்று முதல் அடிகளாரின் பெருந்தொண்டரானார்.  அவரை பின்பற்றத் தொடங்கினார்.  மறைமலையடிகள் எங்கெல்லாம் சொற்பொழிவாற்றச் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று அவரின் சொற்பொழிவினைக் கேட்டார்.
1929 ஆம் ஆண்டு சைவர் மாநாடு ஒன்று திருப்பாதிரிப்புலியூரில் நடைபெறவிருந்தது.  அதற்கு அடிகளார் தான் தலைமை ஏற்றார்.  சொற்பொழிவையும்

9.9.12

இணைய இதழ்கள்





திண்ணை இதழ்
இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள்.  அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது.
     சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன.  சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன.  இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில்

8.9.12

திரு.வி.க. சில குறிப்புகள்

திரு.வி.கலியாணசுந்தரனார்


1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று பிறந்தார். விருத்தாசலம் முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாகத் தோன்றினார்.  1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார்.  1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.  சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது.  இதனால் கல்வி தடைப்பட்டது.  நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச்

7.9.12

விடுதலைப் போராட்ட வீரர்


தீர்த்தகிரியார்



இவர் டி.என். தீர்த்தகிரியார் ஆவார்.  தர்மபுரியைச் சார்ந்தவர்.  கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு முதலிய போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்.

6.9.12

இலக்கியமும் இலக்கணமும்


இலக்கியம் இலக்கணம் அறிவது மனிதனை பண்படுத்துமா?


     இலக்கியங்கள் என்பவை ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் தெரிவித்து நிற்கின்றன.  எந்த எந்த மொழிகளில் செறிவான இலக்கியங்கள் இல்லையோ அந்த மொழிகள் நன்னிலையை அடைவது சற்று குறைவு தான்.  மொழியானது தன்னை இலக்கியத்தோடு இணைத்துக் கொண்டு புதிய பரிணாமம் எடுக்கும் போது தான் அதன் அடைவு சரியான நோக்கை நோக்கிச் செல்லும்.  மற்றபடி மொழிக்கு ஒரு கட்டுக்கோப்பை ஏற்படுத்தித் தருவது இலக்கணத்தின் பாற்பட்டது.
இலக்கணமும் இலக்கியமும்:
     மொழி தன்னுடைய உன்னத இயல்பை தொன்மையான கட்டுக்கோப்பை இழக்காமல் இருக்க இலக்கண அமைப்பு வேண்டப்படுகிறது.  அதனால் தான் பெரும்பான்மையான தமிழறிஞர்கள் இலக்கணத்தை அதிகம் வலியுறுத்தியிருக்கின்றனர்.  ஆனால் கல்வி என்று வரும் போது மாணாக்கர் இதனை மிகக் கடினமானதென்று கருதுகின்றனர்.  இவ்வெண்ணம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். 
     மொழி இலக்கணம் இலக்கியத்தை அடியொட்டியதாக இருக்கிறது.  ஒவ்வொரு மொழியும் இலக்கண அமைப்பை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.  அதோடு நில்லாமல் செம்மையான இலக்கிய வளங்களையும் கொண்டு இலங்க வேண்டும். 
உண்மையில் மனித மனத்தை இவை பண்படுத்துகின்றனவா?
     ஆம் என்று தான் சொல்லத் துணிய வேண்டும்.  இலக்கியங்கள் ஏராளமான விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன.  நடத்தை முறைமைகள், நாகரிகக் கூறுகள், பண்பாட்டு விளக்கங்கள் போன்ற வாழ்க்கை அத்தியாவசியக் கூறுகள் இலக்கியத்தில் தான் உள்ளன.  பக்தி சார் இலக்கியங்கள் இவற்றுள் சிறப்பான பெயர் பெறுகின்றன.  இறைவனைச் சென்றடையும் வழி இன்னது என்று சொல்லும் முகத்தான் மனிதனை ஆற்றுப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது.  புறப்பொருள் வெண்பாமாலை போன்ற புற நூல்களை ஆயும்போது மனிதனின் வீரம் நிறைந்த வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுட்டுகிறது.  அன்பையும் அரவணைப்பையும் பல சங்க இலக்கியங்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன.  குறுந்தொகை, நற்றிணை போன்ற சங்க இலக்கியங்கள் காதல் வாழ்வுக்கும் கற்பு வாழ்வுக்கும் எடுத்துக்காட்டுகளை நிர்மாணம் செய்து நிற்கின்றன.  அகத்திணையைப் பற்றிய செய்தியைச் சொல்லும் அகப்பொருள் வெண்பாமாலையை எழுதிய நாற்கவிராச நம்பி களவு கற்பு பற்றி தெற்றென விளக்கிச் செல்கிறார்.  அரிச்சந்திர புராணம் சொல்லும் உண்மையினூடே நிற்றல் என்ற உறுதிப்பாடு மானிட வாழ்வியலின் அடியைத் தொட்டு நிற்கிறது.  இப்படி இலக்கியங்களும் இலக்கணங்களும் மனிதனின் மனதைப் பண்படுத்தி நிற்கும் போது அவற்றை பண்படுத்தும் ஆற்றல் இல்லை என்று ஒதுக்கி வைக்கலாமா.  எவர் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் படிக்க முன்வருகிறார்.  அப்படி முன் வந்தால் மட்டும் தான் மானிட குமுதாயம்(சமுதாயம்) மனிதத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சீர் தூக்கிப் பார்த்து பண்பட்டுச் சிறக்கும்.

5.9.12

கண்டுபிடியுங்கள்

இவர் யார்?



இவர் யார் என்று கண்டுபிடியுங்கள்.....................

அறிவோம் நாயன்மாரை



இடங்கழி நாயனார்:
   கோ என்றொரு நாட்டில் உள்ள இடம் தான் கொடும்பாளூர்.  இவ்வூர் அந்நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது.  இந்நாட்டை ஆண்ட குறுநில மன்னன் இடங்கழியார்.  இவர் மக்கள் மீதும் சிவபெருமான் மீதும் ஏக அன்பு கொண்டு விளங்கினார்.  சிவபெருமானுக்கு நாடுமுழுவதும் பூசைகள் நடைபெற வழிவகுத்தார்.  சிவனின் ஆழ்ந்த தொண்டனாகத் திகழ்ந்தார்.  சைவ சமயம் நன்கு செழிப்புடன் விளங்கக் காரண்மாக விளங்கினார்.
     இவ்வாறு அவர் அரசாட்சி புரிகையில் அவருடைய நாட்டில் சிவனடியார்களுக்கு உணவு படைக்கும் ஒரு தீவிர சிவபக்தன் நாள்தோறும் இதனைச் செய்வது வழக்கம்.  ஒரு நாள் கூட மறந்தும் உணவு கொடுக்காமல் இருந்ததிலன்.  சோதனையாக பண்டங்கள் அவனுக்கு எங்கும் கிடைத்தில.  என்செய்வது என்று திக்காடி நின்றான்.  சிவனடியார்களுக்கு உணவு படைப்பது தான் தன்னுடைய சிவப்பணி என்றே வாழ்ந்து வந்தான்.  இதிலிருந்து எப்படி தன்னுடைய சைவ நெறிக்கொள்கையை மாற்றிக்கொள்வது என்று எண்ணி அரண்மனையிலிருந்த தானியக் கிடங்கில் நெல்லை எடுத்து வந்து சிவனடியார்களுக்கு உணவு சமைக்கத் திட்டமிட்டான்.  இதற்காக அரண்மனைக்குச் சென்று எவரும் அறியாமல் நெல்லை எடுக்க முற்படும் போது இரவு நேரக் காவலாளியிடம் அகப்பட்டுக் கொள்கிறான்.  பின்னர் மன்னர் இடங்கழி நாயனாரிடம் அழைத்துச் செல்லப்படுகிறான்.  திருடியதன் நோக்கம் யாது என அவர் வினவ அவனும் உரிய காரணத்தைக் கூறினான்.  காரணத்தைக் கேட்ட மட்டில் அடடா என்னே உன் சைவப் பற்று என்று புகழ்ந்து சிவனடியார்களுக்கு உணவளிக்க ஏராளமான தானியங்களையும் செல்வங்களையும் வழங்கி சிவத்தொண்டு சிறக்க வாய்ப்பு நல்கினார்.

நூல் அறிமுகம்

திருவள்ளுவர்க்குப் பின் அரசியல் அறம்

நூலின் பெயர்        : திருவள்ளுவருக்குப் பின் அரசியல் அறம்
ஆசிரியர்             : புலவர். சி. பெருந்தேவன் (சி. இராமலிங்கம்)
நூல் வகை           : அற இலக்கியம்
பதிப்பு                : முதற்பதிப்பு 2012; தி.பி. 2043
விலை               : உருபா. 150/-
நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு          : 0413-2359587 (கம்பன் மறுதோன்றி அச்சகம்)

நூலாசிரியரைப் பற்றி திரு இரா.திருமுருகனாரின் கருத்து:
     சி. இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இப்புலவர் புகழ்பெற்ற தமிழாசிரியர்.  புதுவைப் பாவலர் பண்ணையில் யாப்பிலக்கணம் பயின்று ‘பைந்தமிழ்ப் பாவலர்என்ற பட்டத்தைப் பெற்றவர்.  சந்தம், வண்ணம், சிந்து, உருப்படி ஆகிய இசைப்பாடல் வகைகளுக்கு இலக்கணந்தெரிந்து படைக்கவல்ல பாவலர்கள் மிகச் சிலரே தமிழ் கூறு நல்லுலகத்தில் இன்று காணப்படுகின்றனர்.  அவர்களில் இவரும் ஒருவர்.  தெளிதமிழ் இதழ் நடத்தும் பாவலர் பரிசுத் திட்டத்தில் பாட்டெழுதி முதற்பரிசு பெற்றவர்.  “சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு” , அறிவுலகக் காவலர்கள், ஆசிரியர் அறம் முதலிய நூல்களின் ஆசிரியர்.  புதுவை அரசின் நல்லாசிரியர் எனும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.  ஆசிரியப் பணி, அரசியற்பணி முதலிய எல்லாத்துறைகளிலும் அறத்தை வற்புறுத்துவதில் அடங்காத வேட்கையுடைய ஆன்றவிந்தடங்கிய சான்றோராய்த் திகழ்பவர்.  அவர்தம் உள்ளத்தில் அவ்வப்போது மண்டியெழும் அறக்கருத்துகளின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது.
     நம் நாட்டில் இன்று பொதுநலம் என்பது உதட்டளவில் பேசப்படுகின்றது.  தன்னலப் பேய்மை எங்கும் தலைவிரித்தாடுகின்றது.  வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சார்பாக இருக்க வேண்டிய அன்பு அறிவற்றவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கும் துணை போய் வன்பாக மாறிக் கொண்டிருக்கின்றது.  என்று தன்னுடைய சமூக நோக்கை படரவிட்டிருக்கிறார் ஆசிரியர் திரு. பெருந்தேவன் அவர்கள்.

     திருக்குறளைப் போன்று அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் படிப்போரின் எண்ணத்தை சற்றே சோதித்துப் பார்க்கச் செய்கிறது.  நாம் ஏன் இவ்வாறு நடக்கிறோம் ஏன் இவ்வாறு நடக்கக்கூடாது என்கிற எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
  
புத்தகம் படிப்போரை இவ்வாறு சிந்திக்கச் செய்துவிட்டாலே நூலாசிரியன் வெற்றி பெற்றவனாகிறான்.  அவ்வகையில் பெருந்தேவன் பெருவெற்றியை இந்நூலின் மூலம் பெற்றிருக்கிறார் என்று கூறலாம்.

அழிந்து போக வேண்டுமாயின் அறத்தினை கைவிடுக வாழ வேண்டுமெனில் (புகழ் எய்த வேண்டுமெனில்) அறத்தை மேற்கொண்டு வாழ்க என்று வரும் ‘அறத்தின் ஆட்சி’ என்னும் தலைப்பில் அமைந்த பாடல் வரிகள் அறம் இன்று தேய்ந்து போய் கொண்டிருக்கிறது என்பதையும் அதை நிலைநாட்ட நாம் முன்வர வேண்டும் என்பதையும் நினைவூட்டி நிற்கிறது.

``அழிதல் விரும்பின் அறங்கொல்; தொழுதல்
விரும்பின் அதுகாத்தல் மேவ்.”(அறத்தின் அட்சி)

யாம் முன்னம் எண்ணற்ற பெருந்தேவன் நூல்களை அலசி ஆராயப் புகுந்ததுண்டு.  சித்தானந்த ஐயனின் அருள்அமையப் பெற்ற பெருந்தேவனின் எண்ணங்கள் எழுத்துக்களாக உருப்பெற்று எம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கின்றன.

புலவர் பெருந்தேவனின் எழுத்தாட்சியும் சொல்லாட்சியும் சிறக்க சிலம்புகள் தளம் வாழ்த்துகிறது.  அவருடைய தமிழ்ப் பணி மேன்மேலும் இவ்வுலகுக்குத் தேவை.  இதனை அவர் கருத்தில் கொண்டு இன்னும் எண்ணற்ற பனுவல் படைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஐயாவுக்குச் சிறப்பு செய்ய வேண்டி அவருடைய அரசியல் அறம் நூலின் ஒவ்வொரு பாடலையும் வலைப்பூவின் தலைப்பில் வெளியிட எண்ணியுள்ளேன்.

புலவர் திரு.பெருந்தேவனின் சொல்திறன் கண்டு யான் வியந்ததை இவ்வுலகும் கண்டு வியக்க வேண்டி என்னுடைய வலைப்பூவில் இவருக்கு பேரணி செய்துள்ளேன்.  புலவர் அவர்கள் விரைவில் என்னை மற்றொரு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பார் என்ற ஏங்குதலுடன் முடிக்கிறேன்.

புலவர் பெருந்தேவனின் சில கவின்மிகு பாடல்கள்:

`ஒருமைப்பாடு என்பது அருமைப்பாடு உண்டேல்
பெருமைப்பாடு ஓங்கும் பெரிது’(ஒருமைப்பாட்டு உணர்வு)

ஆளும் நிலம் வலியது ஆக்கும் தொழில்முனைவோர்
மூளும் பொருள்வளத்தின் மூச்சு(வலுவான நல்லரசு)

எல்லா நலமும் இருந்தென் அறமுரைக்கும்
வல்லாரை இல்லாத மன்று.(வழக்குரைஞர் அறம்)

ஏடு தருங்கல்வி இல்லான் அரசியலில்
ஈடுபடல் என்றும் இழிவு(கல்வியறிவுடைமை)

காதலைக் காமமாய்க் கண்டு களிப்படைதல்
மோதல்கட் கெல்லாம் முதல்(ஆண் பெண் உறவு)