தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

29.8.12

முப்பருவ முறை

முப்பருவத் தேர்வு முறை எப்படி இருக்கிறது?
     சமச்சீர் கல்வி முறையினை அடியொட்டி முப்பருவத்தேர்வு முறை தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  இதன் சாதக பாதகங்களை ஆராயப் புகுவோம்.
     ஆசிரியர்கள் தங்களை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்ள ஒரு திறமைக் களமாக இம்முறை திகழ்கிறது.  பாடங்களை முன் கூட்டியே திட்டமிடும் பாங்கு நன்கு மிளிர்கிறது.  மூன்று இயல்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றை ஏற்றவாறு திட்டமிட்டுச் செயல்படுத்த ஏற்ற நேரம் இருப்பது உண்மை.
     தேர்வு முறைகளும் சிறந்தவண்ணம் உள்ளன.  வகுப்பறையில் அவ்வப்பொழுது மதிப்பிடும் முறையினால் மாணவர்களின் கற்றல் அடைவை எளிதில் நம்மால் புரிந்துகொண்டு அடுத்த படிக்குச் செல்ல ஏதுவாகிறது.  
    மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடங்களைக் கற்று வருகின்றனர்.  ஏராளமான வீட்டு ஒப்படைப்புகளைக் கேட்டுச் செல்கின்றனர். அப்படியே செய்தும் வருகின்றனர். எப்படியெல்லாம் வீட்டு ஒப்படைப்புகளைக் கொடுக்கலாம் என்று ஆசிரியர்களின் மூளைக்கு நல்ல வேலை தான். நம் ஆசிரியர்கள் எப்பொழுதும் மாணவர்களின் மேல் மிகுந்த கவனம் செலுத்துபவர்கள் என்பதில் சந்தேகமுண்டோ.
     உடனுக்குடன் மதிப்பிடும் முறையை எத்தனை ஆசிரியர்கள் பின்பற்றுகின்றனரோ தெரியவில்லை ஆனால் இம்முறையைப் பின்பற்றினால் நல்ல கற்றல் அடைவை நாம் ஏற்படுத்தலாம் என்பது உறுதி. 

     ஆசிரியர்களுக்கு இம்முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு இம்முறை மாறாமல்  பள்ளிகளில் பாடம் எடுக்க முயற்சி நடந்துவருகிறது. பள்ளி திறந்தவுடனேயே புதுச்சேரி அரசு கல்வித்துறை வட்டத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது பாராட்டத்தக்கது. (இன்னும் ஆராய்வோம்........)

No comments:

Post a Comment