கா.சுப்பிரமணியம் பிள்ளை |
1888 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை தம்பதியினருக்கு மகனாய்த் தோன்றினார். 1906ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1910 ஆம் ஆண்டு வரலாறு பாடத்தில் இளங்கலையும் 1913ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும், 1914 ஆம் ஆண்டு இறுதியில் தமிழிலக்கியத்தில் முதுகலையும் பெற்றார். இவர் சட்டம் பயின்று 1917 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றதோடு முதன் முதலில் எம்.எல் பட்டம் பெற்றவர் என்ற சிறப்புக்கும் உரியவர்.
திரு.சுப்பிரமணியப் பிள்ளைஅவர்களை அனைவரும் கா.சு.பிள்ளை என்றே அழைத்தனர். தமிழில் மிகுந்த புலமை பெற்றவராக இருந்ததோடு சட்டப்படிப்பிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர். சட்டத்தில் முதுகலையான எம்.எல் பட்டம் பெற்றதனால் `எம்.எல். பிள்ளை’ என்றும் சிலர் அழைத்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றை மிகத்திருத்தமாய் ஆக்கினார். இஃது அனைவராலும் வெகுவாய் பாராட்டப்பட்டது.
பல ஆய்வுகளை மேற்கொண்டு பல்கருத்துக்களை வழங்கியிருக்கிறார். இவரின் கருத்துக்கு மாறுபட்டு நிற்போரும் இருப்பதாகத் தெரிய வருகிறது. தமிழ் மொழியில் நூல் யாத்ததோடன்றி ஆங்கிலத்திலும் ஏற்ற புலமை பெற்று நூல் சமைத்தார். இவர் இயற்றிய நூல்களுள் `தமிழர் சமயம்’ என்பதுவும் ஒன்றாகும்.
No comments:
Post a Comment