தமிழ்10 இல் அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவு’ |
தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்ட பின் பல விருதுகள் தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவ்விருதுகளுள் குறிப்பிடத்தக்கது `குறள்பீட விருது’.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாகக் கடந்த ஆண்டு (2011) மே மாதம் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு பிரதீபா பாட்டீல் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.
குறள்பீட விருது:
ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுள் குறிப்பிடத்தக்கது குறள்பீட விருது. கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்கள் குறள்பீட விருது பெற்றார். இவ்விருது உரூபாய் ஐந்து இலட்சம் மதிப்புடையதாகும்.
இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறள்பீட விருது( 2008-09) பிரெஞ்சு நாட்டு அறிஞர் பிரான்சிவா குரோ அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 2012, திசம்பர் 21 இல் தலைநகர் புதுதில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்த விருதினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.
இதுவரை சமற்கிருதம், பிராகிருதம், பாலி, அராபிக், பாரசீகம் ஆகிய மொழிகளுக்கே இவ்வகையான விருதுகள் வழங்கப்பட்டுவந்தன. கடந்த ஆண்டு முதல் தமிழ் மொழிக்கும் வழங்கப்படுகிறது.
குறள்பிட விருதுடன் தொல்காப்பியர் விருதும், இளம் அறிஞர் விருதும் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியர் விருது உரூபாய் ஐந்து இலட்சம் பணமுடிப்பையும் இளமறிஞர் விருது உரூபாய் ஒருஇலட்சம் பணமுடிப்பையும் கொண்டதாகும்.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் அடிகளாசிரியருக்குத் தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இளமறிஞர் விருதினை ஆர்.அரவிந்தன் (விழுப்புரம்), மணிகண்டன் (தஞ்சை), கலைமகள் (தஞ்சை), வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் (இராமநாதபுரம்), கே.பழனிவேலு (புதுவை), சந்திரா (மதுரை), அரங்க.பாரி (அரியலூர்), மு.இளங்கோவன் (அரியலூர்), பவானி (திருவாரூர்), கலைவாணி(நாகை), செல்வராசு, வேல்முருகன், மணவழகன், சந்திரசேகரன், சிமோன் சான் ஆகிய பதினைவர் பெற்றனர்.

No comments:
Post a Comment