தொகைகள் சிலவற்றை அறிவோம்:
அகராதிகள் சொல்லுக்குப் பொருள் வழங்க படைக்கப்பட்டவை. அவ்வகராதிகளுள் சிறப்புமிக்க ஒன்றாக விளங்குவது தொகையகராதியாகும். தொகைச்சொற்களுக்கு உரிய விரியைக் கொண்டு இவை காணப்படுகின்றன. இவ்வகையில் சில தொகைச் சொற்களுக்குண்டான விரியை இப்பகுதியில் காணலாம்.
ஏழிசை:
தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை
உபாயம்:
சாமம், பேதம், தானம், தண்டம்
ஆசிரியர்:
உரையாசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்
ஆதாரம்:
மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி(ஐயம்), ஆஞ்ஞை (ஆணை)
ஐங்கணை:
தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை,
அறப்பகுதி:
இல்லறம், துறவறம்
அரசர் தொழில்:
ஈதல், உலகுபுரத்தல், ஓதல், படை பயிறல், பொருதல், வேட்டல்
காடுபடுதிரவியம்:
அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி (கத்தூரி)
சிவசின்னம்:
உருத்திராக்கம், திருநீறு
தாயார்:
பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்
No comments:
Post a Comment