தொகைகள் சிலவற்றை அறிவோம்:
அகராதிகள் சொல்லுக்குப் பொருள் வழங்க படைக்கப்பட்டவை. அவ்வகராதிகளுள் சிறப்புமிக்க ஒன்றாக விளங்குவது தொகையகராதியாகும். தொகைச்சொற்களுக்கு உரிய விரியைக் கொண்டு இவை காணப்படுகின்றன. இவ்வகையில் சில தொகைச் சொற்களுக்குண்டான விரியை இப்பதிவில் காணலாம்.
1. ஏழிசை:
தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை
2. உபாயம்:
சாமம், பேதம், தானம், தண்டம்
3. ஆசிரியர்:
உரையாசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்
4. ஆதாரம்:
மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி(ஐயம்), ஆஞ்ஞை (ஆணை)
5. ஐங்கணை:
தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை,
6. அறப்பகுதி:
இல்லறம், துறவறம்
7. அரசர் தொழில்:
ஈதல், உலகுபுரத்தல், ஓதல், படை பயிறல், பொருதல், வேட்டல்
8. காடுபடுதிரவியம்:
அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி (கத்தூரி)
9. சிவசின்னம்:
உருத்திராக்கம், திருநீறு
10. தாயார்:
பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்
11. நிறம்:
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை
12. தோற்றம்:
சரம், அசரம்
13. பாயிரம்:
பொது, சிறப்பு
14. பா:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
15. பாதகம்:
கொலை, பொய், களவு, கள், குருநிந்தை
16. பொருள்:
கல்விப் பொருள், செல்வப்பொருள்
17. பொழுது:
மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு,
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
18.பஞ்சமூலம்:
செவ்வியம், சித்திர மூலம், கண்டுபரங்கி, பேரரத்தை, சுக்கு
19.பருவம்:
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
20. பிணி:
வாதம், பித்தம், சிலேத்துமம்
No comments:
Post a Comment