தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

18.9.12

யோகத்திற்கு வலிமை சேருங்கள்!


யோகத்திற்குத் தடை எது?
நம்முடைய உடலின் தன்மைக்கு ஏற்காத உணவை மேற்கொள்ளக் கூடாது.  நான்கு பிரிவுகளாக்கி யோகம் பயிலுபவன் தன் வயிற்றை இரண்டு பங்கு உணவாலும் ஒரு பங்கு நீராலும் நிரப்ப வேண்டும்.  உயிர் காற்று வரும் அளாவிற்கு ஒரு பகுதியைத் தனித்துஇருக்கச் செய்ய வேண்டும்.
     அளவுக்கி மீறிய உணவைனை மேற்கொள்வது தவறாகும்.  ஆசனத்தைப் ஒத்தவரை நிறைய உணவு சாப்பிடலாம் எப்பொழுது என்றால் ஆசனத்தில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு.  நல்ல பயிற்சிக்குப் பின்னர் நச்சு உணவையும் செரிக்கும் தன்மையை நம் வயிறு பெற்றுவிடுகிறது.  தேர்ச்சி பெறும் வரை அளவுக்கதிகமாக உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
     உடல் அதிகப்படியாக சோர்வடையும் செயல்களைச் செய்யக் கூடாது.  இவ்வாறு செய்வது யோகம் பயில்வதற்கு,  உடல் ஒத்துழையாமையைக் கொடுக்கும்.  அதற்காக கடினமாக உழைக்கக் கூடாது என்று பொருளல்ல யோகத்திற்கு முன் அவ்வாறு இல்லாமல் பார்த்துக் கொள்வது நலம்.
     நாம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும்.  பேசுவதால் என்ன நேர்கிறது?  நம்முடைய உயிர்வளி (காற்று) அதிகமாக வெளியேறுகிறது.  இதனைத் தடுக்க அளவாகப் பேசுதல் வேண்டும்.  உயிர்வளி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளீடாக நிலை நிறுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கு ஆற்றல் சேர்க்கை நடைபெறுகிறது.
யோகப் பயிற்சிக்குத் தேவையற்றா கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும்.  விடியற்காலையில் தண்ணீரில் முழுகுதல், அடிக்கடி உண்ணா நோன்பு மேற்கொள்ளுதல் , ஒரு வேளை உணவு உண்பது , சோற்றைத் தவிர்த்து பழம் முதலியவற்றை மட்டும் உண்ணுதல் போன்ற பழக்கங்களை ஒதுக்குதல் வேண்டும்.
     மக்கள் கூட்டத்தை விலக்க வேண்டும்.  எபொழுதும் பலருடன் சேர்ந்திருப்பதால் பிறரின் பேச்சு செயல் முதலியவை நம் மனத்தை சஞ்சலப் படுத்தும்.  பிறர் சேர்க்கை நம் காலத்தை வீணடிப்பதுடன் நம் கடமைகளை நேரத்தில் செய்ய இயலாமல் தடுத்துவிடும்.  எனவே, கூடியவரை தனிமையில் இருந்து மனச்சஞ்சலத்தைத் தவிர்ப்பதுடன் காலம் தவறாது செயல்களைப் புரியப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment