தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

14.9.12

மு.வ வின் அன்னைக்கு - புரட்சிக் கொள்கைகளைப் பின்பற்றலாமா?


அன்னைக்கு 2


அன்புள்ள அம்மா,
     எப்படியாவது வறுமை ஒழிய வேண்டும் என்று நான்ன் எழுதினேனே அல்லாமல் கிளர்ச்சி மூலமாகவா புரட்சி வாயிலாகவா என்று நான் ஒரு கருத்தையும் எழுதவில்லையே?  ஆனாலும் நீ எழுதிய அறிவுரையை ஏற்றுக்கொண்டு நன்றி கூறுகின்றேன்.  “மற்ற நாட்டின் எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு இந்த நாட்டிற்கும் அதே வழியை
வகுக்க வேண்டியதில்லை.  அது முப்பது ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞான முற்போக்கும் விழிப்பும் இல்லாத காலத்தில், தொன்று தொட்டு பண்பாடு இல்லாத நாட்டில், ஆள்வோரும் ஆளப்படுவோரும் அடியோடு மாறுபட்டிருந்த சூழலில் ஏற்பட்ட புரட்சி.  அந்தக் காலம் போய்விட்டது.  கருவிகளும் முறைகளும் மாறிவிட்டன.  இது வேறு நாடு; சூழல் முற்றிலும் வேறு; ஆகையால் கண்மூடிப் பின்பற்றிய புரட்சிக் கொள்கைகளைப் பேசிப் பயனில்லைஎன்று எழுதியவை ஒருவேளை அப்பா பக்கத்திலிருந்து சொல்லியபடி எழுதிய சொற்களோ?  அம்மா! எப்படி இருந்தாலும், இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
     முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எவ்வளவோ மாறியிருக்கிறது என்பது உண்மைதான்.  நம் நாட்டின் பண்பாடும் வேறுதான்; பகைவர்க்கும் இரக்கம் காட்ட வேண்டும் என்ற எண்ணம் அடிப்படையில் இருந்துவரும் நாடுதான். ‘ஆனால் அதற்கு மாறாக, பழகினவர்களையே வதைக்க வேண்டும்; உடனுள்ளவர்களையே ஒழிக்க வேண்டும் என்பதிலும் நம் நாடு பின் வாங்கவில்லை!  எப்படியும் கொடுமைக்கும் கூசும் மனம் கொஞ்சம் உண்டு.  சூழலும் வேறுதான்.  மக்கள் பெரும்பாலாரின் வாக்குரிமையைப் பெற்ற தலைவர்களே ஆட்சி புரிகின்றார்கள்.  ஆகையால் மாறுதல் நிகழ வேண்டும் என்று எழுதினேனே தவிர, ஓர் இயக்கத்தை நடத்தி அதன் மூலமாக மாறுதல் வரவேண்டும் என்று எழுதவில்லை.  மாறுதல் வேண்டும்; அவ்வளவு தான்.  வழியைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.  சரிதானே, அம்மா!
     இதோடு நான் நிறுத்திக் கொண்டாலுய்ம் என்னை வெறுங்கொள்கையாளன் என்றும், செயலாளன் அல்ல என்றும் இகழக்கூடும்.  ஆகையால் என் உள்ளத்தில் இருப்பதையும் வெளியிடுகிறேன்.  நீ எழுதியது போல் “இளைஞர் உள்ளங்களில் எண்ணங்கள் சும்மா இருப்பதில்லை.  செயல் வடிவம் பெறவே விரும்புகின்றன”.  ஆனால் என் எண்ணங்கள் கொலையும் கொள்ளையும் கொடுமையும் மலிந்த இரத்தபொபுரட்சியில் படியவில்லை.  அப்படிப்பட்ட புரட்சிக்கு வித்தாகிவிடுமோ என்று அஞ்சித்தான் அப்பாவுக்குப் படித்துக் காட்டியிருப்பாய் என்று கருதுகிறேன்.  இந்த அச்சத்தால் அவர் சொன்ன சொற்களை அப்படியே கடிதத்தில் எழுதிவிட்டிருப்பாய்.  நான் இப்போது உறுதியாகச் சொல்கிரேம்.  இரத்தம் சிந்திக் கொடுமைகள் செய்யும் புரட்சியைப் பற்றி நான் கனவு காணவே இல்லை.  ஒருவேளை அந்தப்புரட்சி தோன்றிவிட்டால் நீயும் அப்பாவும் நானும் சேர்ந்து வருந்துவோம்.  ஆகையால் அது வராமல் த்டுப்பதற்கு வழிகோல  வேண்டாமா?  ஏரி உடைத்துக் கொள்ளும், ஏரி உடைத்துக்கொள்ளும் என்று ஊரிலுள்ள இளைஞர் சிலர் சொல்லி வருகின்றார்கள்.  ஏரி உடைத்துக் கொண்டால் ஊர் அழியுமே என்று உங்களைப் போன்றவர்கள் அஞ்சுகின்றார்கள்; உடைத்துக்கொள்ளக்கூடது என்று இறைவனையும் வேண்டுகின்றார்கள்.  ஆனால் அஞ்சுவதும் வேண்டுவதும் மட்டும் பயன் தருமா? திடீரென்று ஏரி உடைத்துக் கொண்டால் அது யார் தவறு? கரையைப் பழுது பார்க்காமல் விட்ட தவறு யாருடையது? (தொடரும் >>>>>)

No comments:

Post a Comment