பாவேந்தர்
அவர்கள் ‘நாலா முத்தம்’ என்னும் காதல் காவியத்தை 1938ஆம் ஆண்டு படைத்தார். இது தான் பின்னாளில் ‘எதிர்பாராத முத்தம்’ என்றானது.’கஜராஜ் சரோஜா காதல் மகத்துவம்’ என்னும் உண்மை நிகழ்வுக் கவிதை பாரதியின் கவிதாமண்டலத்தில் வெளிவந்தது. இதனை அடியொட்டியது தான் எதிர்பாராத முத்தத்தின்
கரு என்கின்றனர். 1939ஆம் ஆண்டு தமிழக இதழில்
வெளிவந்த ‘ஒரே முத்தம் – இரண்டு மரணங்கள்’
என்ற சிறுகதையும் இதன் மூலங்கள் என கூறப்படுகிறது.
பொன்முடி,
பூக்கோதை என்கிற இருவர்தாம் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகி ஆவர். நாயகன் இறந்தவுடன் நாயகியும் மாண்டு போகும் காதலின்
இறுதி அத்தியாயம் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
இதனை பாரதிதாசன் பின்வருமாறு நவின்றார்.
“தீந்தமிழர்
உயர்வினுக்குச் செத்தான்! அன்பன்!
செத்ததற்குச்
செத்தாள் அத்தென்னாட்டு அன்னம்!”
|
25.9.12
நாலா முத்தம்
Labels:
பாரதிதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment