திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு
அருகே இருக்கும் திருமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் இடையர் குலத்தில் உதித்தவர். சிவபெருமானையே எப்பொழுதும் நினைந்து உருகுவார். அவருக்குப் பல தொண்டுகள் செய்த வண்ணம் இருந்தார். நிரைகளை மேய்ப்பதைத் தன்னுடையத் தொழிலாகக் கொண்டிருந்தார். இவர் இசையின் மீது ஆர்வங்கொண்டிருந்தார். புல்லாங்குழல் இசைப்பதை மிகவும் விரும்பினார். எப்பொழுதும் சிவனை நினைத்தே இசைத்துக்கொண்டிருப்பார்.
ஒருமுறை இவ்வாறு இசைத்துக்கொண்டிருக்கும் போது இவருடைய
இசையைக் கேட்ட தேவர்கள் தத்தம் தொழில் மறந்து மயக்கமுற்றனர் இவரது இசையைக் கேட்டு. பசுக்களும் தம் தொழிலை மறந்து நின்றன. இது மட்டுமா எருது, சிங்கம், மான், யானை போன்ற எண்ணற்ற
உயிரினங்கள் மெய்மறந்து நின்றன. எல்லாமும்
இவர் பின்னே செல்லத் துவங்கின. இச்செய்தியை
அறிந்து சிவனும் தன் துணையுடன் வந்து இவரைக் கண்டு இசையில் மெய்மறந்து போனார். பின்னர் சிவன் கேட்டுக்கொண்டதற்கு இயைய ஆனாயர் கைலாயம்
சென்றார். அங்கு தேவர்களுக்கும் எம்பெருமானுக்கும்
புல்லாங்குழல் வாசித்து எம்பெருமானின் அடியார்களை மகிழ்வித்தார்.
|
11.9.12
ஆனாய நாயனார்:
Labels:
நாயன்மார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment