தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

26.9.12

வினையெச்சமும் நன்னூலும்


வினையெச்சம் ஓர் அலசல்
வினை முடியாது நிற்கும் தன்மையுடைய சொல்லை வினையெச்சம் என்பர். நன்னூலார் இதனை பின்வருமாறு வரையறுத்துச் சொல்கிறார்.
“தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே” (நன்னூல் 342)
அதாவது செயலும் காலமும் விளங்கி, பாலுடன் வினையானது எஞ்ச நிற்பது வினையெச்சமாகும்.
வினை என அவர் உரைத்ததற்குக் காரணம் வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்,
வினையாலணையும் பெயர், தொழிற்பெயர், தெரிநிலை, குறிப்பு ஆகியவையும் அடங்கும்.
(உ-ம்) உரைத்துச் சொல் – தெரிநிலை வினையெச்சம்
உரையின்றிப் போ – குறிப்பு வினையெச்சம்
[ பாடம் படித்தான் – வினைமுற்று
வந்த முருகன் – பெயரெச்சம்
வந்து சென்றான் – வினையெச்சம்
படித்தவன் – வினையாலணையும் பெயர்
படித்தல் – தொழிற்பெயர் ]
னி வினையெச்ச வாய்பாடுகளை அறிவோம்.
செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர், வான்,பான், பாக்கு ஆகியவை தாம் வினையெச்சத்தின் வாய்பாடுகளாம்.
செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்னும் ஐந்தும் இறந்தகாலத்திற்கு வரக்கூடிய வினையெச்ச வாய்பாடுகளாகும்.
`செயஎன்னும் வாய்பாடு மட்டும் நிகழ்காலத்தைக் குறித்து வரும் வினையெச்ச வாய்பாடாகும்.
செயின், செய்யிய, செய்யியர், வான்,பான், பாக்கு ஆகிய இவை ஆறும் எதிர்காலத்திற்குரிய வாய்பாடுகளாகும்.
(உ-ம்)
இறந்த காலம்
வந்து சென்றான் – (செய்து)
உண்குபு போயினான் – (செய்பு)
பொய்யாக் கொடுக்கும் – (செய்யா)
காணூ மகிழ்ந்தான் – (செய்யூ)
உண்டெனச் சென்றான் – (செய்தென)
நிகழ் காலம்
ஆடச் சென்றான் (செய)
எதிர்காலம்
உண்ணின் மகிழ்வான் – (செயின்)
ஆடிய சென்றான் – (செய்யிய)
ஆடியர் சென்றான் – (செய்யியர்)
கொல்வான் வந்தது – (வான்)
தின்பான் போனான் – (பான்)
செய்பாக்கு வந்தான் – (பாக்கு)





No comments:

Post a Comment