தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

7.9.12

விடுதலைப் போராட்ட வீரர்


தீர்த்தகிரியார்



இவர் டி.என். தீர்த்தகிரியார் ஆவார்.  தர்மபுரியைச் சார்ந்தவர்.  கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு முதலிய போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்.
நவம்பர் 4 1880 ஆம் ஆண்டு அன்னசாகரத்தில் பிறந்தார்.  இவர் தீர்த்தகிரி முதலியார், தீர்த்தகிரியார், எம்டன் என அழைக்கப்பட்டார். இவருடைய தந்தை நாராயண் முதலியார் .
போராட்டம் நடத்தியதற்காக ஏறக்குறைய எட்டு வருடங்களுக்கும் மேல் சிறை சென்றவர்.  வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.  பாலகங்காதர திலகரைப் பின்பற்றியவர். 

1906-ல்ஆண்டு சிறைவாசம்
1916-ல் 2 ஆண்டு சிறைவாசம்
1930-ல்  1½ ஆண்டு சிறைவாசம்
1931-ல் சட்ட மறுப்பிற்காக 1 ½ ஆண்டு சிறைவாசம்

No comments:

Post a Comment