சோழ
நாட்டில் கஞ்சாறூர் என்னும் ஊர் இருந்தது.
இவ்வூரில் வேளாளர் குடியில் தோன்றியவர் தான் மானக்கஞ்சாறனார். சிவனின் மீது மிகுந்த பக்திகொண்டவர். சிவபக்தர்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்யும்
தன்மையவர்.
ஆனால்
இவருக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டவில்லை.
இறைவனை வேண்டி நின்றார் பின்னர் இறைவன் திருவருளால் ஒரு பெண் மகவை அடையப்பெற்றார். அம்மகவை நன்றாக வளர்த்து வந்தார். ஏற்ற பருவம் வந்ததும் அப்பெண்ணை மணம் முடித்துக்கொடுக்க
ஏற்பாடு செய்தார்.
கலிக்காம
நாயனார் என்னும் சிவ அன்பரைத் தன்னுடைய மகளுக்கு மணம் முடிக்க எண்ணினார். இதற்கு முன்னரே கலிக்காம நாயனார், தன் சுற்றத்தாரை
மானக்கஞ்சாறரிடம் அனுப்பி பெண் வேண்டினார்.
இறுதியில் ஒரு சுபதினம் பார்க்கப்பட்டு அந்நாளில் விவாகம் வைத்துக்கொள்வதாகவும்
முடிவாயிற்று. எனவே கலிக்காம நாயனார் கஞ்சாறூரை
நோக்கிப் பயணப்பட்டார்.
இச்சமயத்தில்
சிவபெருமான் மகாவிரதி என்னும் வடிவத்தில் மானக்கஞ்சாறரின் இல்லத்தில் பிரவேசித்தார். அப்போது மானக்கஞ்சாறர் அவரை இனிதே வரவேற்று உபசரித்தார். இறுதியில் தன்னுடைய மகளை மகாவிரதியின் காலில் விழுந்து
வணங்கும் படி பணித்தார் மானக்கஞ்சாறர். மகளும்
அவ்வாறே செய்ய அவளுடையக் கூந்தலைக் கண்ட மகாவிரதி இவளுடைய கூந்தல் எமக்கு மிகவும் பயன்படும்
என்றுரைத்தார். உடனே மானக்கஞ்சாறர் தன்னுடைய மகளின் கூந்தலை அறுத்துக் கொடுத்துவிட்டார். அதனைப் பெற்று மகாவிரதியும் சென்றுவிட்டார்.
கலிக்காம
நாயனார் பெண்ணைக் கண்டு மணப்பதற்காக வந்தார். அப்போது அப்பெண் மொட்டை வடிவங்கொண்டிருந்தாள். இதனைக் கண்ணுற்ற கலிக்காம நாயனார் அவளை மணம் முடிக்க
மறுத்தார். பின்னர் சிவபெருமான் மகாதேவியுடன்
தோன்றி மானக்கஞ்சாறருக்குக் காட்சியளித்து மீண்டும் அவருடைய மகளுக்கு அழகிய கூந்தலை
வழங்கினார்.
இது
நடந்த பின்னர் கலிக்காம நாயனார் அப்பெண்ணை மணந்து நன்முறையில் வாழ்ந்து வந்தார்.
No comments:
Post a Comment