தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

18.9.12

நன்னூலின் திறன் கண்டீரோ!


காண்டிகை மற்றும் விருத்தியுரையின் இலக்கணம்


உரை என்பது காண்டிகையுரை எனவும் விருத்தியுரை எனவும் பகுத்துக்கூறப்படும்.  முதலாவதாகிய காண்டிகையுரையின் இலக்கணம் பின்வருமாறு அமைகிறது.
கருத்துரையும்,  பதவுரையும்,  மேற்கோளும் ஆகிய மூன்றையும் சொல்லுதலாலும் இம்மூன்றுடனே வினாவும் விடையும் அகிய இரண்டு வகைகளாயும் கூட்டிச் சொல்லுதலாலும் சூத்திரத்துள்ள பொருளை விளக்கி உரைப்பவை காண்டிகையுரைகளாம்.
நன்னூல்:
``கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
சூத்திரத்து உட்பொருள் தோற்றுவ காண்டிகை”(நன்னூல் 22)
சூத்திரத்தில் உள்ள பொருள் மாத்திரமே அல்லாமல், அவ்விடத்துக்கு இல்லாமல் முடியாத எல்லாப் பொருள்களும் விளங்குமாறு, தான் உரைக்கின்ற உரையாலும் ஆசிரிய வசனங்களாலும் மேற்கூறிய ஐந்து காண்டிகை உறுப்புகளினாலும் ஐயம் விலக மெய்யான பொருளைக் குறைவின்றி உரைப்பது விருத்தியுரையாகும்.
நன்னூல்:
சூத்திரத்து உள்பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றியமையா யாவையும் விளங்கத்
தன் உரை யானும் பிறனூ லானும்
ஐயம் அகலஐங் காண்டிகை உறுப்போடு
மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி (நன்னூல் 23)

No comments:

Post a Comment