கவிதைக் காதலி
மகாகவி பாரதியார்
கவிதையைக் காதலியாகச் சொல்ல என்ன காரணம்?
கவிதையின் மூலம், தான் திளைத்த இன்பத்தை வெளிப்படுத்துகிறார். நாமும் அவ்வின்பத்தில் மூழ்குவோம். வாராய் என்று கவிதையை கவின்மிகு வார்த்தையில் ஆராதிக்கும் பாரதியை என்னவென்று பாராட்டுவது. ``நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே” என்னும் வரிகள் நெஞ்சை அள்ளிச் செல்வது உண்மையே!
வாராய்! கவிதையாம்
மணிப்பெயர்க் காதலி
பன்னாள் பன்மதி
ஆண்டுபல கழிந்தன
நின்னருள் வதனம்நான்
நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை
அடிமையாக் கொள யாம்
மானிடர் குழாத்தின்
மறைவுறத் தனியிருந்து
எண்ணிலா இன்பத்து
இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக்
களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின்
இன்குரல் போன்ற
தீங்குர லுடைத்தோர்
புள்ளினைத் தெரிந்திலேன்
மலரினத் துன்றன்
வாள் விழி யொப்ப
நிலவிய தொன்றினை
நேர்ந்திலேன்? குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச்
சொற்கள்போல் தண்ணிய
நீருடைத் தறிகிலேன்;
நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத்
தெய்வமும் நீயென
நினையே பேணி
நெடுநாள் போக்கினேன்.
வானகத் தமுதம்
மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர்
வஞ்சகத் தொடுமுள்
வீழ்த்திடைத்
தொண்டையில் வேதனை செய்தென
நின்னொடு களித்து
நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப்
படுத்தவந் தெய்திய துலகிற்
கொடியன யாவுளும்
கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை
அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து
காண்பொழுது ஐயகோ!
மறைந்தது தெய்வ
மருந்துடைப் பொற்குடம்
மிடிமைநோய் தீர்ப்பான்
வீணர்தம் முலகப்
புந்தொழில் ஒன்று
போற்றதும் என்பான்
தெந்திசைக் கண்ணொரு
சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத்
துணையெனப் புகுந்து அவன்
பணிசெய இசைந்தேன்,
பதகி நீ! என்னைப்
பிரிந்துமற்
றகன்றனை பேசொணா நின்னருள்
இன்பமத் தனையும்
இழந்துதான் உழன்றேன்
சின்னாள் கழிந்தபின்
– யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த
நினைப்புமே தேய்ந்தது
கதையிலோர் முனிவன்
கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா
வீழ்ந்திடு முன்னர்த்
தன்மகனிடை ”என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது
பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு
வெறுப்புடை யவ்வுடல்
துணித்தெனைக்
கொன்று தொலைத்தலுன் கடனாம்
பாவமிங் கில்லையெனப்
பணிப்பிஃதாகலின்!”
|
20.9.12
பாரதியின் கவிதைக் காதலி
Labels:
பாரதியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment