பெரும்பான்மையான தமிழன்பர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட பதிவு |
தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி என்றும் அம்மொழி பேசிய இனத்தவர் தான் பழந்தமிழர் என்றும் அவர்களே உலகில் முதலில் தோன்றிய இனத்தவர் என்றும் ஆய்ந்து கூறும் கூற்றை மறுக்கின்ற மொழி ஆய்வுநரும் விழிபிதுங்கிப் போய் நிற்கும் அளவிற்கு நந்தமிழ் மக்கள் கணித அறிவில் சிறந்தோங்கினர் என்பதற்கு ஆதாரம் பகரும் பதிவே இப்பதிவு.
கணிதத்தில், ஒன்று, பத்து, நூறு ,ஆயிரம் என்று வரும் எண்ணியல் சார் கணிதக் கூறு அன்றே நந்தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்தது. சிலர் தற்போதுள்ள கணிதக் கூறிலும் இம்முறை உள்ளதே என்பர். இருப்பினும் தற்போதுள்ள முறையைத் தாண்டிய கணிதக் கூறுகள் நம்முடைய மொழியனரால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றைய கணிதக் கூறுகள் தமிழர்கள் கண்ட கணித எழுத்து முறைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதை பின்வரும் சான்றைக் கொண்டு நிறுவலாம்.
தமிழர்கள் கண்ட எண்ணியல் கணித அமைப்பு:
``ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம், பத்து நூறாயிரம், கோடி, அற்புதம், நிகற்புதம், கும்பம், கணம், கற்பம், நிகற்பம், பதுமம், சங்கம், வெள்ளம், அந்நியம், அற்டம், பறட்டம், பூறியம், முக்கோடி, மகாயுகம்.
வேறுபடும் நிலை:
மேற்கண்ட எண்ணியல் அமைப்புகள் தமிழர்களால் அன்றே பயன்படுத்தப்பட்ட ஒன்று. இவற்றில் அந்நியம் என்பது தற்போதுள்ள எண்ணியல் முறைப் படி `நூறு சில்லியன்’ என அழைக்கப்படுகிறது. ஆனால் அந்நியத்திற்குப் பிறகு இடம்பெற்றுள்ள அற்டம், பறட்டம், பூறியம், முக்கோடி, மகாயுகம் ஆகியவற்றிற்கு இணையான எண்ணியல் அமைப்பு தற்போது நாம் பயன்படுத்தும் கணித அமைப்பில் இல்லை.
இஃதொன்றே தமிழரின் கணித அறிவைப் பற்றி தற்போதையத் தலைமுறையினர் அறிந்துகொள்ளச் சான்று பகர்ந்து நிற்கிறது.
No comments:
Post a Comment