தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

2.10.12

உறுதி ஏற்போம்


மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று நாம் ஏற்க வேண்டிய உறுதி என்ன?
காந்தியடிகள்
``அவரை அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி ஒழுக வேண்டும்’’ என்னும் உறுதி மட்டும் தான் நம்முடைய உறுதியெனில் சாதாரணமானது என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.
நம்மால் என்ன முடியும் என்று அவர் அன்று இருந்திருந்தால் இன்று நாம் சுதந்திர பூமியில் சுகமாய் வாழ்ந்திருக்க முடியாது.  அப்படிப்பட்ட மகா உன்னதம் புரிந்தவரின் பிறந்த நாளான இப்பொன்னாள் அனைவரது வாழ்விலும் ஏதாவதொரு உறுதியை ஏற்கும் நாளாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அக்டோபர் 2 அன்று மட்டும் அவரை நினைத்துப் பாடி, மனம் உருகி,  மாலை அணிவித்துவிட்டால் போதுமா? 
அவர் காட்டிய அன்பு வழி அறவழி இவற்றையெல்லாம் நாம் எப்பொழுது நினைவது?  ஒவ்வொருவரும் அவரின் பிறப்பையும் அதன் மகத்துவத்தையும் மனதார உணர்ந்து செயல்படத் தொடங்கினால் இக்குமுதாயத்திற்கு நன்மைபுரிந்தவராகக் கருதப்படுவார்.  இதுதான் காந்தியும் வேண்டியது.  அகிம்சையின் அற வழியில் எவன் நடக்க விரும்புகிறானோ அவனால் இத்தேசம் புத்தம் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு மிக மிடுக்குடன் நடைபோடும்.
வன்முறை கலாச்சாரம் நம்முடையதன்று என்பதை எவன் உள்ளீடாக உணரத் தலைபடுகிறானோ அவனுள்ளத்தில் காந்தியம் முளைவிட்டிருக்கிறது என்று அர்த்தம்.  வன்முறை என்னும் அற்ப கத்தியை எவன் தன்னுடையக் கையில் எடுக்கிறானோ அவன் தன்னுடைய வாழ்க்கையை,  அக்கத்தியின் பிடியில் அற்பணித்துவிடுகிறான் என்று தான் சொல்ல வேண்டும்.
கையூட்டுப் பழக்கம் நாட்டை விட்டு அகன்று நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்று காந்தியின் இப்பிறந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும்.  அதோடு நின்று விடாமல் கையூட்டு வழங்குவதையும் நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.  ஊழலற்ற அரசாங்கம் அமைய காந்தியடிகளின் மறு அவதாரத்தைக் காண,  இன்றைய நம் கடவுளர்களிடம் நாம் வேண்டிக்கொள்வோம் ``இன்றைய அரசியல் பிரியர்கள் ஊழலற்ற இந்தியா காண உழைக்க வேண்டுமென்று!’’
தன்னுடைய சுயநலம் பாராத தூய அரசியல் பிரியரை இக்குமுதாயத்திற்கு வழங்கிடு காந்தியே என்று கேட்கலாம்.  காந்தியடிகள் இதற்கு சித்தம் செய்வார்.  தன்னுடையக் கொள்கைகளை பின்பற்றி ஒழுகுகின்றவர்களை இந்நாட்டின் சீர்திருத்தவாதியாக அவதாரமெடுக்கச் செய்வார்.  அப்படியொரு சீர்திருத்தவாதியைத் தான் நாம் தேட வேண்டும்.
 நிகழ் காலத்தில் இப்படித்தான் காந்தியின் பிறந்த நாளன்று நாம் உறுதியும் ஏற்க வேண்டும்.( போலும்!)

No comments:

Post a Comment