தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

2.10.12

விப்ரநாரண ஆழ்வார்


தொண்டரடிப் பொடியாழ்வார்


தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு விப்ரநாரணர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.  திருவரங்க நாதனுக்கு தினந்தோறும் மாலை சாத்த, ஆலயத்தில் தோட்டம் அமைத்து மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.  அங்கு தேவ தேவி என்ற விலைமாதின் வயப்பட்டுத் தம் வாழ்நாளைக் கழித்தார்.  பின்னர், அக்கள்ளம் கரைய உருகிப் பாடிய பாக்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி நூல்களாகும்.  இவர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி நூல்,
 கவிதை நயமும் இயற்கை எழிலும் நிறைந்ததாகும்.  அர்ச்சையில் அரங்கனைத் தவிர வேறு ஒருவரையும் பாடாத அன்பர்.

``பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண் என்ற புகழ் மிக்க பக்திப் பாடலைப் பாடிய ஆழ்வார்.  “மெய் எல்லாம் போகவிட்டு விரிகுழலாரிப்பட்டு பொய் எல்லாம் பொதிந்து கொண்ட பொய்யனேன், பொய்யனே? என் மனதின் ஓர் தூய்மை இல்லை.  வாயில் ஓர் இன்சொல் இல்லை, பொழுதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி அணைய மாட்டேன்; தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்; காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்; ஆகையால் ஏதுமற்றேன்என்கிறார்.

``ஊரிலேன் காணியில்லை உறவும் மற்றொருவர் இல்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன், ப்ரமமூத்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகிறேன்
ஆரூர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே என்று இறைவனை நோக்கி இறைஞ்சுகிறார்.

No comments:

Post a Comment