செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம் - 2
- செம்மொழி மாநாட்டோடு இணைந்து ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்பட்டது. இதற்காக 124 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
- தகவல் தொழில் நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தி நந்தமிழை வளப்படுத்தலாம் என ஆராயப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டது.
சிற்பக்காட்சி, ஓலைச்சுவடி, செப்பேடு,
கல்வெட்டு, அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்டவை, வனம் சார் பொருள்கள் என எழுநூற்றுக்கும்
மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்று
ஒன்பது மலர்களைப் பற்றிய படக்காட்சித் தொகுப்பு மாநாட்டுக்கு வந்த அனைவரின் கவனத்தையும்
ஈர்த்தது.
- அஸ்கோ பார்ப்போலா என்ற பின்லாந்து நாட்டைச் சார்ந்தவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருது 10 இலட்ச ரூபாய் மதிப்புடையது. இதோடு ஐம்பொன்னாலான திருவள்ளுவர் உருவச் சிலையும் வழங்கப்பட்டது.
- சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கிய சென்னைப் பனேசியா மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.விசயனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது ஒரு இலட்சத்துடன் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.
- செம்மொழித் தமிழ் மாநாட்டையொட்டி ‘செம்மொழி மாநாட்டுக்கான அஞ்சல் தலை’ வெளியிடப்பட்டது. இது திருவள்ளுவர் நிற்பது போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்டது. இதோடு ‘குமரகுருபரர் சுவாமிகள்’ அஞ்சல் தலை, மொழியறிஞர் ‘இராபர்ட் கால்டுவெல்’ அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டன.
தீர்மானங்கள்:
- தமிழ் வளர்ச்சிக்காக நூறு கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ் செம்மொழிச் சங்கம் அமைத்தல்.
- பள்ளி, கல்லூரிகளில் செம்மொழி பற்றிய பாடம் இணைத்தல்.
- தமிழ் வழியில் கல்வி கற்பவர்களுக்கு அரசுப் பணி வாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல்.
- நடுவணரசில் தமிழை ஆட்சிமொழியாக்கல்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கல்.
- தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அரசுக் கொடை வழங்கல்.
- தேசியக் கல்வெட்டியல் நிறுவனத்தைத் தமிழகத்தில் அமைத்தல்.
- பூம்புகார், குமரிக்கண்டம் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சிச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
- தமிழகத்தின் அட்சிமொழி மாநாட்டை நினைவு கூரும் வகையில் நூறு கோடி செலவில் செம்மொழிப் பூங்காவும் மேம்பாலம் அமைத்தல்.
- தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பிற மொழியிலும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கச் செய்தல்.
No comments:
Post a Comment