ஞானியார் அடிகள் |
தமிழ் அன்பர்களே இன்று நாம் அறிய இருக்கும் தமிழறிஞர் சிறந்த உரையாசிரியர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ஞானியார் அடிகள் ஆவார். 1873 ஆம் ஆண்டு மே திங்கள் 17 ஆம் நாள் பிறந்தவர். சைவம் தழைக்க அரும்பாடுபட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்தார்.
தஞ்சாவூரில் உள்ள கும்பகோணத்தில்
திருநாகேசுவரம் என்னும் ஊரில்
அண்ணாமலை – பார்வதி தம்பதியருக்குப் பிறந்தவர்.
அண்ணாமலை – பார்வதி தம்பதியருக்குப் பிறந்தவர்.
தமிழையும் சைவத்தையும் ஒருமித்த
ஒன்றாகவே பாவித்தவர். சைவசித்தாந்த மன்றங்கள்
பல நிறுவியதோடு வாணிவிலாச சபை, பெருமன்றம் முதலியவற்றையும் ஏற்படுத்தினார். தமிழ் தழைப்பதற்கு ஏதுவாக இருந்தார். திருக்கோவிலூர் மடம் இவரின் தலைமையின் கீழ் செயல்பட்டது.
மறைமலையடிகளுக்கும் திரு.வி.கவுக்கும்
நட்புறவு ஏற்படுவதற்குப் பாலமாக இருந்தவர்.
திருப்பாதிரிப்புலியூரில் சைவ மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அம்மாநாடே திரு.வி.கவைப் பற்றி மறைமலையடிகள் அறிந்துகொள்வதற்கு
வாய்ப்பாக அமைந்தது. மாநாட்டின் இறுதியாக திரு.வி.க
அவர்கள் உரையாற்றினார். இவரின் உரையை செவியுற்ற
மறைமலையடிகள் இப்படி ஒரு அற்புத ஆன்மீக சொற்பொழிவை நிகழ்த்தும் இவர் யார் என்று கேட்டறிந்து
திரு.வி.க வை போற்றிப் பேசினார். அன்று முதல்
மறைமலை அடிகளை திரு.வி.க பின்பற்றத் தொடங்கினார்.
இந்நட்புக்கு திரு.ஞானியார் அடிகளே அடித்தளமிட்டார்.
69 அகவை வரை வாழ்ந்த ஞானியார்
பிப்ரவரி திங்கள் 1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
அசலாம்பிகை அம்மையார் வாழ்க்கைக் குறிப்பு
அசலாம்பிகை அம்மையார் வாழ்க்கைக் குறிப்பு
No comments:
Post a Comment